மருமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் மாமியார் மாரடைப்பில் மரணம்
Advertisement
கடந்த 25ம் தேதி இரவு வேலை முடிந்து சிலுக்குவார்பட்டிக்கு டூவீலரில் சென்றவர், அம்மையநாயக்கனூர் பள்ளிவாசல் எதிரே சாலையோரம் உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விபத்தில் இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வந்தனர்.
இதனிடையே மகள் கர்ப்பிணியாக உள்ளநிலையில் மருமகன் இறந்துவிட்டாரே என்ற வேதனையில் நாகம்மாளின் தாய் சின்னப்பொண்ணு (46) கதறி அழுதுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சின்னப்பொண்ணுவும் உயிரிழந்தார். கணவரை தொடர்ந்து தாயும் உயிரிழந்ததால் மன உளைச்சலில் நாகம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement