தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூரிய ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்கான 2 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்

பெங்களூரு: பிரோபா 3 செயற்கைகோளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி-59 இன்று மாலை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான இஎஸ்ஏ, சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்காக பிரோபா 3 என்ற செயற்கைகோளை வடிவமைத்தது.
Advertisement

550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று (டிச.4ம் தேதி)) மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து செயற்கைகோளை ராக்கெட்டில் பொருத்துவது, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ராக்கெட் ஏவுதலுக்காக இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

கவுன்ட்டவுன் முடிவதற்கு முன்பாக புரோபா-3 செயற்கைகோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது. பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்டில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் செயற்கைகோளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ஏவுதல் நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்தது.

செயற்கைகோளின் உந்துவிசை கலனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த உந்துவிசை கலன் செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை கட்டுப்பாட்டு துணை அமைப்பின் ஒரு பகுதி. இது விண்வெளியில் நோக்குநிலை மற்றும் சுட்டிக்காட்டுதலை கணிக்க பயன்படுகிறது. இன்று மாலை 4.04 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று சரியாக மாலை 4.04 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

Advertisement

Related News