தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை குலைக்க நினைக்கும் துரோகிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம்: தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ‘மெட்ராஸ் மாகாணம்’ என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு ‘தமிழ்நாடு’ என்று பெயர்ச்சூட்டிய வரலாற்று சிறப்புமிக்க பொன்னாள் இன்று. ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையை - 1967ல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த கழக அரசு நிறைவேற்றிய திருநாள்.
Advertisement

‘தமிழ்நாடு’ என்று அண்ணா மும்முறை முழங்க, ‘வாழ்க’ என்ற உறுப்பினர்களின் வாழ்த்து ஒலியால் சட்டமன்றமே உணர்ச்சி பெருக்கால் தத்தளித்தது. ‘‘தமிழ்த் தாயின் நெஞ்சங் குளிர்ந்திடத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றி விட்டோம் என்கிற பூரிப்பு எல்லா உறுப்பினர்களின் உள்ளத்திலும்” என்று எழுதினார் கலைஞர். தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்க கூட்டத்தின் சதியை, அண்ணா - கலைஞர் வழிநின்று முறியடித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நம் தலைவர்கள் போராடி மீட்டுத் தந்த தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லிக்கு காவு கொடுக்க கிளம்பியிருக்கும் பாசிசத்தின் பல்லாக்கு தூக்கிகளை வீழ்த்துவோம். தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை குலைக்க நினைக்கும் எதிரிகளையும், துரோகிகளையும் ஓரணியில் நின்று விரட்டியடிக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வெல்க! தமிழ்நாடு வாழ்க!! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement