தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொடக்குத் தக்காளி... களைச்செடியும் காசு கொடுக்கும்...

கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் இருந்து அரைமணிநேரம் பயணம் செய்தால் கரடிகுளம் என்ற கிராமத்திற்குச் செல்லலாம். இந்த கிராமத்தின் பிரதானத் தொழில் விவசாயம்தான். கம்பு, சோளம், உளுந்து, நெல் போன்ற பயிர்களில் இருந்து காய்கறிப்பயிர்கள் வரை அனைத்தும் சாகுபடி செய்யும் விவசாயம் நிறைந்த ஊர். மானாவாரியிலும் சரி இறவையிலும் சரி, வருடம் முழுவதும் ஏதாவதொரு சாகுபடி நடந்தபடி இருக்கும். குறு விவசாயிகள் பெரு விவசாயிகள் என தங்களுக்கு எவ்வளவு நிலம் இருக்கிறதோ, அதை விவசாய நிலமாகத்தான் அனைவரும் வைத்திருக்கிறார்கள். அந்தளவிற்கு விவசாயத்தை முதன்மையான தொழிலாக கொண்ட கிராமம். இந்த ஊரின் மொத்த விவசாயத்தில் இருந்தும் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறது பால்சாமியின் விவசாயப்பயிர். அதென்ன மாறுதலென கேட்கிறீர்களா?. அப்போ இதைப் படிங்க.கிராமங்களில் தெருவோரத்திலும் குப்பைகளிலும் காட்டுச்செடியாகவும் களைச்செடியாகவும் வளரும் ஒருவகைச் செடிதான் சொடக்குத் தக்காளி. இந்தக் காட்டுச்செடியை தனது நிலத்தில் சாகுபடி செய்து அறுவடை செய்ய இருக்கிறார் விவசாயி பால்சாமி.

Advertisement

ஒரு காட்டுச்செடியை, காசு தரும் செடியாக மாற்ற யோசனை எப்படி வந்தது எனவும், பால்சாமியின் விவசாயம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளவும் ஒரு நாள் பயணமாக பால்சாமி இருக்கும் கரடிகுளம் கிராமத்திற்கு சென்றோம். எங்கள் வருகையை எதிர்பார்த்திருந்த பால்சாமி, நாங்கள் வந்ததும் மகிழ்ச்சியோடு வரவேற்று அவரது விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றார். சொடக்குத் தக்காளி சாகுபடி செய்யலாமென உங்களுக்கு எப்படித் தோன்றியது, அதைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றதும் ஆர்வத்தோடு பேசத் தொடங்கினார் பால்சாமி. எனக்கு 57 வயதாகிறது. தாத்தா, அப்பா காலத்தில் இருந்து இப்போது வரை எங்களுக்கு விவசாயம்தான் தொழில். பிளஸ்2 படித்து முடித்த அடுத்த நாளில் இருந்து எனது தொழிலும் விவசாயம்தான். எல்லோரையும் போல நானும் நெல், காய்கறி, சிறுதானியம் என அனைத்தையும் சாகுபடி செய்து வந்தேன்.

எனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் சோளம் விதைத்து அறுவடை செய்து, தற்போது அந்த நிலத்தில் வேறு சில பயிர்களும் சாகுபடி செய்து கொண்டிருக்கிறேன். சோளம் அறுவடையில் ஏக்கருக்கு 3.5 டன் கிடைத்தது. 100 கிலோ சோளத்தை ரூ.2750 க்கு விற்பனை செய்தேன். சோளத் தட்டைகளை அதே நிலத்தில் உழுது உரமாகவும் ஆக்குகிறேன். தற்போது எனது நிலத்தில் புடலை, ஆமணக்கு, மரவள்ளி போன்ற பயிர்கள் உள்ளன. அதிலிருந்து அறுவடை செய்து வருமானம் பார்த்து வருகிறேன்.இதற்கிடையில், நான் புடலை போட்டிருக்கிற நிலத்தில் கொரோனா காலத்தில் காட்டுச்செடியாக இருக்கும் சொடக்குத் தக்காளியை நட்டு வைத்தேன். அதாவது, காடுகளிலும் குப்பைகளிலும் வளரும் இந்த சொடக்குத் தக்காளியை பறித்து வந்து ஒரே இடத்தில் நட்டேன். இந்த சொடக்கு தக்காளியில் இருந்து கிடைக்கும் காய்களில் அதிக மருத்துவ குணம் உள்ளதாகவும், வெளிநாடுகளில் அதிக பணம் கொடுத்து இந்தக் காய்களை வாங்குவதாகவும் வந்த செய்திகளை படித்ததால், இந்தச் சொடக்குத் தக்காளியை நாம் வளர்க்கலாமென முடிவெடுத்து வளர்த்து வந்தேன்.

கொரோனா காலத்தில் விவசாயத்தை சரியாக மேற்கொள்ளாததால் இந்த சொடக்குத் தக்காளி செடி அழிந்து போனது. அப்படி, அழிந்து போனச் செடிகள்தான் தற்போது எனது நிலமெங்கும் மகசூல் தருகிறது. ஆம். இந்த சொடக்குத் தக்காளி வேரிலிருந்து பறித்து எறிந்தால் மட்டும்தான் அழியும். இல்லையென்றால் மீண்டும் மீண்டும் காய்த்துக்கொண்டே தான் இருக்கும். அதன்படி, கொரோனா காலத்தில் எனது நிலத்தில் அழிந்துபோன காட்டுச்செடியான சொடக்குத் தக்காளி தற்போது எனது நிலமெங்கும் வளர்ந்து காய்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்டுச்செடிதான் விவசாயத்தில் களைச்செடி. பயிர்களுக்கு நடுவே முளைத்திருக்கும் களைச்செடிகளில் இந்த சொடக்குத் தக்காளியும் ஒன்று. ஆனால், நான் எனது நிலத்தில் இந்தக் களைச்செடியான சொடக்கு தக்காளியை பறிக்கவில்லை. மாறாக, அதை வளர்க்கலாமென முடிவெடுத்தேன். தற்போது அது மகசூல் தருகிறது.

இந்தச் சொடக்குத் தக்காளியை ஏக்கர் கணக்கில் எல்லாம் பயிரிட முடியாது. அதேபோல, இதனை எப்படி பராமரிப்பது என்பதும் எனக்குத் தெரியாது. அதுவே வளர்ந்து அதுவே பலன் கொடுக்கும். நாம் அதை பிடுங்கி எறியாமல் இருந்தாலே போதுமானது.

இந்தச் செடி சிறியதாகவும், சுமார் 1-3 அடி உயரம் வரை மட்டுமே வளரும். இந்தச் செடியில் தோல் மாதிரியான ஒரு கூண்டு வடிவ பை இருக்கும். அந்தப் பைக்குள்தான் இந்த சொடக்குத் தக்காளி காய் இருக்கும். அந்தக் காயை பறித்து 15 நாட்கள் வரை கூட வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் இந்தக் காய்களை அப்படியே சாப்பிடலாம் அல்லது சுரைக்காய் போல குழம்பில் போட்டும் சாப்பிடலாம். ஆனால், நான் இந்தக் காய்களை நம்ம ஊரில் விற்கப் போவது கிடையாது. இந்தக் காயில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. தமிழகத்தில் சில இடங்களில் இருந்து வெளிநாட்டுக்கு கூட இந்தக் காய் விற்பனைக்குச் செல்கிறது. அதற்குக் காரணம், இதில் உள்ள மருத்துவ குணம்தான். ஜெர்மனியில் இந்த சொடக்குத் தக்காளி காயை, 2 காய் ரூ.3000க்கு வாங்கிச் சாப்பிட்டதாக நண்பர் ஒருவரின் மூலம் கேள்விப்பட்டேன்.

அதேபோல, உணவுகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் ஆன்லைன் தளங்களில் இந்த காயை ஒரு கிலோ ரூ.6000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால், எனது வயலில் விளைந்த இந்த சொடக்குத் தக்காளியை உரிய இடத்தில் விற்பனை செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். தற்போதைய அறுவடையில் எனக்கு 20 கிலோ வரை இந்தக் காய்கள் கிடைத்துள்ளது. மறு அறுவடையில் கொஞ்சம் குறையலாம். விளைச்சல் முறையில் இது குறைவாக இருந்தாலும் விற்பனை முறையில் இது அதிக லாபம் கொடுக்கும். இந்தக் காயை ஒரு கிலோ ரூ.2500 கொடுத்து வாங்கிச்செல்ல வியாபாரிகள் கேட்டு வருகிறார்கள். இன்னும் அதிக விலைக்கு யாராவது கேட்டு வந்தால் விற்பனை செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என மகிழ்வோடு பேசி முடித்தார் விவசாயி பால்சாமி.

தொடர்புக்கு:

பால்சாமி: 97902 87653.

பால்சாமியின் வயலில் புடலை சாகுபடியும் நடந்தபடி இருக்கிறது. ரூ.600க்கு விதைகள் வாங்கி புடலையை பயிரிட்டவர், தற்போது புடலையில் மட்டும் 10 ஆயிரம் வரை வருமானம் பார்த்திருக்கிறார். இதுபோக, ஆமணக்குச் செடியும் பயிரிட்டிருக்கிறார். இதிலிருந்து கிடைக்கும் விதைகளையும் விற்பனை செய்து வருகிறார் பால்சாமி.

காட்டுச்செடி, களைச்செடி என அழைக்கப்படும் இந்தச் சொடக்கு தக்காளி மூலிகைச் செடியாகவும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளை கீரையாகவும் சாப்பிடுகிறார்கள். இந்த இலையோடு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் வலி, மூட்டு வலி பிரச்னைகள் தீரும். அதேபோல, இந்தக் காய்கள் உடல் வலிக்கும், உடம்பில் ஏற்படும் கட்டிகளை நீக்குகிறது. சர்க்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் இந்த காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் குணமடையலாம்.

Advertisement