ரூ.137.31 கோடியில் 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: ரூ.137.31 கோடியில் 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை அரசு சட்டக் கல்லூரியில் ரூ.48.20 கோடியில் கல்விசார், நிர்வாக கட்டடங்களையும், வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் ரூ.6.46 கோடியில் நூலகக் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் 3,037 ஓய்வூதியதாரர்கள், 769 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு காசோலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
Advertisement
Advertisement