சமூக ஊடக பதிவால் குஜராத் கிராமத்தில் பயங்கர கலவரம்: கடைகள் சூறை: வாகனங்கள் உடைப்பு
அகமதாபாத்: குஜராத்,காந்திநகர் மாவட்டம் தேஹம் தாலுகாவில் பஹியால் கிராமம் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய பதிவு வெளியானதையடுத்து கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 4 கடைகள் மற்றும் 6 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது குறித்து மாவட்ட எஸ்பி ரவிதேஜா வாசம்செட்டி,‘‘ உபி உள்ளிட்ட வட மாநிலங்களில் சமூக ஊடகங்களில் ஐ லவ் முகமது என்ற பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
இதற்கு போட்டியாக பஹியால் கிராமத்தை சேர்ந்த கடைக்காரர் ஒருவர் தன்னுடைய வாட்சப்பில் ஒரு ஸ்டேட்டஸ் வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அந்த நபரின் கடையை ஷட்டரை கும்பல் ஒன்று உடைத்து கடையில் இருந்த பொருட்களை வெளியில் எடுத்து போட்டு தீ வைத்தனர். மேலும் அருகில் உள்ள வீடுகளின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
Advertisement