சமூக ஊடகங்களால் பாதிக்கும் குழந்தைகள் – நடவடிக்கை என்ன?... பெரம்பலூர் திமுக எம்.பி. அருண் நேரு கேள்வி
டெல்லி: நாட்டில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதையும் அதனால் பாதிக்கப்படுவதையும் குறித்து கவலை தெரிவித்துள்ள திமுக பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் அருண் நேரு ஒன்றிய அரசு இது குறித்து ஏதேனும் ஆய்வு அல்லது கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
சமூக ஊடக அடிமைத்தனத்தை குறைக்கவும் குழந்தைகள் மீதான அதன் எதிர்மறை தாக்கத்தை நீக்கவும் குறிப்பிட்ட சமூக ஊடகங்களுக்கு விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என கேட்டுள்ள அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் மனநல பிரச்சினைகளுக்கு உள்ளான குழந்தைகள் அதிலிருந்து மீளவும் அரசு உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.
Advertisement