சமூக கருத்துக்காக சிறைக்கு அனுப்பினால் நடவடிக்கை: ஆந்திர உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
Advertisement
அமராவதி: சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துக்காக யாரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டால் மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டுகளுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அர்னேஷ்குமார் மற்றும் இம்ரான் பிரதீப் கதி வழக்குகளில் உச்சநீதிமன்றம் பல விதிகளை வகுத்து அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற விதிமுறைகளை கவனத்தில் கொண்டு நடுவர் நீதிமன்றங்கள் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். சமூக ஊடகங்களில் கருத்து கூறுவோரை இயந்திரத் தனமாக சிறைக்கு அனுப்பினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்றும் முறையின்றி செயல்படும் மாஜிஸ்திரேட்டுகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆந்திர உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement