கடும் பனிப்பொழிவு எதிரொலி எவரெஸ்ட் சிகரத்தின் மலையேற்ற பகுதி மூடல்
பெய்ஜிங்: எவரெஸ்ட்டின் சீனப் பக்கம் அமைந்து டிங்ரி கவுண்டியில் உள்ள ஜூபெங் சிகரத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. மிதமான பனிப்பொழிவு கூட பாதைகள் மற்றும் சாலை நிலைமைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அதிக உயரத்தில் மலையேற்ற வீரர்களுக்கு இது ஆபத்தாக இருக்கலாம். இந்நிலையில் மலையேற்ற வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு சீனா ஜூபெங் சுற்றுலா பகுதியை மூடியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ஜூபெங் சிகரம் மலையேற்றத்திற்காக மூடப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement