சென்னை: பாம்புக் கடிக்கான விஷ முறிவு மருந்து உற்பத்தி செய்ய சிறப்பு மையத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், வேறு நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு மையம் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது. பாம்புக் கடியால் ஏற்படும் மரணங்களை குறைக்கும் வகையில் உயர் தர மருந்து தயாரிக்கப்பட உள்ளது. ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஆசிய சந்தைகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.