ரூ.127.57 கோடியில் 5322 பள்ளிகளில் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு
Advertisement
சென்னை: ரூ.127.57 கோடியில் 5322 பள்ளிகளில் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. ரூ.159 கோடியில் 2232 அரசு பள்ளிகளில் 2236 ஆய்வகங்கள் அமைக்கவும் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 2026-27க்குள் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 37,626 அரசு பள்ளிகளில் 30,774 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன
Advertisement