தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* உளுந்தை ஊறவைக்கும் முன்பே கழுவ வேண்டும். ஊற வைத்தபின் கழுவினால் சத்துக்கள் வீணாகிவிடும்.

* காபி டிகாஷனில் அரை தேக்கரண்டி பனை வெல்லம் சேர்த்தால் மணமும் ருசியும் அதிகரிக்கும்.

* மழைநீரில் துணிகளை துவைத்தால் அழுக்கு நீங்கி பளிச்சிடும்.

* அரை ஸ்பூன் சர்க்கரை அல்லது எள் சேர்த்து கீரையை வேகவைத்தால் பசுமை நிறம் மாறாமல் இருக்கும்.

* உப்பு கரைத்த நீரில் தக்காளி பழங்களை வைத்திருந்தால் அவை அழுகாது.

* வாடிப் போன கீரை, கேரட், பீட்ரூட் போன்றவற்றை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து எடுத்தால் ஃபிரெஷ்ஆகிவிடும்.

* ஃபிரிட்ஜில் உள்ள ஐஸ் டிரேயின் மீது வெதுவெதுப்பான நீரை விட்டால் ஐஸ் துண்டுகளை சுலபமாக எடுக்கலாம்.

* சுண்ணாம்பை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது, கெட்டவாடையும் வராது.

* சர்க்கரை, இனிப்பு தின்பண்டங்கள் வைத்திருக்கும் டப்பாவை சுற்றி உப்பு, மஞ்சள் தூள் தூவி வைத்தால் எறும்புகள் வராது.

* புட்டு மிருதுவாக இருக்க மூன்றில் இரண்டு பங்கு பச்சரிசியும், மூன்றில் ஒரு பங்கு புழுங்கலரிசியும் சேர்த்து மாவாக்க வேண்டும்.

* மாவடு ஊறுகாய் தயாரிக்கும் போது கொஞ்சம் சுத்தமான விளக்கெண்ணெய் விட்டால் மாவடு நீண்ட நாட்களுக்குக் கெடாது.

* மீனை நீரில் போட்டதும் மூழ்கி விட்டால் அது நல்ல மீன். நீரில் முழ்காமல் மிதந்தால் அது கெட்டுப் போன மீன் என்று அறியலாம்.

* தீப்பெட்டியில் 4, 5 அரிசி போட்டு வைத்தால் தீக்குச்சி நமத்துப் போகாது.

* கடுக்காய் பொடியை நீரில் சற்று நேரம் போட்டு, அந்த நீரால் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் போய் விடும்.

* கோதுமை மாவை சலித்து அதில் கொஞ்சம்் உப்பு தூவி வைத்தால் மாவில் பூச்சி, வண்டு வராமல்இருக்கும்.

* பாலில் சிறிது சமையல் சோடா சேர்த்துக் காய்ச்சினால் பால்திரியாது.

* தோசைக்கு மாவு அரைக்கும்போது அரிசியுடன் கைப்பிடி அவல் சேர்த்தால் சுவை கூடும்.

* முட்டைக் கோைஸ வேகவைத்த தண்ணீரை குடித்துவர குடல் புண்கள் ஆறத் தொடங்கும்.

* கோதுமை மாவில் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து பஜ்ஜி போடலாம்.

* ரவை உப்புமா கிளற போகிறீர்களா? பாதிக்கும் பாதி மோரும் சேர்த்துக் கிளறுங்கள். நன்றாக வரும்.

* அரிசி, பருப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

* முட்டையின் மேல் எண்ணெய் தடவி வைத்தால் பல நாட்களுக்கு முட்டை கெடாமல் இருக்கும்.

* அரிசி சேர்த்த பால் பாயசம் செய்ய போகிறீர்களா? பாசுமதி அரிசியை உபயோகித்தால் சுவையும், மணமும் ஸ்பெஷலாக இருக்கும்.

- விசாலாட்சி

கண்ணன், ஒசூர்.