குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
* உடைத்து வைத்த தேங்காய் காய்ந்துபோய் விட்டால், அந்த தேங்காய் மூடியில் பாலை ஊற்றி பத்து நிமிடம் வைத்திருந்து பின்பு தேங்காயை உபயோகித்தால் புதியது போல இருக்கும்.
* ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி பாதியை உபயோகித்து விட்டு மீதி பாதியை அடுத்த நாள் உபயோகிக்க வேண்டுமானால் பாதி எலுமிச்சைப் பழத்தின்மீது உப்பைத் தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
* ஆரஞ்சுப்பழத் தோலை காய வைத்து கொசுவத்தி போல கொளுத்தி வைத்தால் கொசுக்கள் வராது.
* சாதம் கொதிக்கும் போது ஒரிரு ஏலக்காய்களை சிறிது நேரம் போட்டு எடுத்து விட்டால் சாப்பாடு மணமாக இருக்கும்.
* கேரட், பீட்ரூட் வாடிப்போனால் நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியதாகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.
* நுங்குத் தோலை எடுத்து அதனுடன் சந்தனத்தைச் சேர்த்து அரைத்து வேர்க்குரு உள்ள இடங் களில் தடவிவந்தால் வேர்க்குரு மறைந்து உடல் வெப்பம் குறையும்.
* வெங்காயம் நறுக்கும்போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்களில் கண்ணீர் வராது.
* உப்பு கரைத்த நீரில் தக்காளிகளைப் போட்டு வைத்தால் அழுகாமல் இருக்கும்.
* வெள்ளி ஆபரணங்களோடு சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி நகை கறுக்காது.
* கீரையை வேகவைக்கும்போது சிறிதளவு எள் சேர்த்து வேகவைத்தால் கீரை பச்சை நிறம் மாறாமல் இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.
* அவித்த முட்டையை அறுக்க கத்தியைப் பயன்படுத்தாமல் கெட்டியான நூலைப் பயன்படுத்தி அறுத்தால் அழகாய் கட் ஆகும். மஞ்சள் கரு உதிராமல் வரும்.
* இட்லிமாவு புளிக்காமல் இருக்க சிறு வாழைத்தண்டை மாவில் போடவும்.
* சிறு தேங்காய் துண்டை தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாட்கள் வரை தயிர் கெட்டுப்போகாது.
- தாமஸ் மனோகரன்