தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

*பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவைப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். பாத்திரமும் சுலபமாகச் சுத்தமாகும்.

* சமையலுக்கு சில சொட்டு மட்டுமே எலுமிச்சைச் சாறு தேவையென்றால் பழத்தை நறுக்காமல் கனமான ஊசியால் துளையிட்டு சில சொட்டுகள் எடுத்துவிட்டு பழத்தை அப்படியே வைத்தாலும் கெட்டுப்போகாமல் இருக்கும்.

* மிக்ஸியில் அரைக்கும் பொருட்கள் குறைவாக இருந்தால் தட்டினால் மூடி விட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.

* முட்டை வெள்ளைக் கருவை அடித்து, கொஞ்சம் உப்பு, சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து வைத்தால் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

* வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்பு போட்டு வெடிக்க விட்டு வறுத்த பிறகு, தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சேனைக் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்து விடும்.

* மைசூர் பாகு செய்யும் போது முந்திரியை விழுதாக அரைத்து சேர்த்தால் சாஃப்ட்டாக இருக்கும். ஒரு சொட்டு பாதாம் எசென்ஸ் சேர்த்தால் பாதாம் கேக் போலவும் இருக்கும்.

* தயிர் பச்சடியில் சிறிது எள் அல்லது ஓமத்தை வறுத்து பொடி செய்து போட்டால் தனிச் சுவை தரும்.

* பிரிஞ்சி அல்லது பிரியாணியில் ஒரு சிட்டிகை குங்குமப்பூவை பாலில் கலந்து சேர்த்தால் சுவை, மணம், நிறம் கூடுதலாகும்.

* காய்களை வேகவைக்கும்போது பொங்கி வழியாமல் இருக்க சிறிது வெண்ணெய் சேர்க்கலாம்.

* பொரி, பொரியாக இருக்கும் அலுமினியப் பாத்திரத்தை ஆப்பிள் தோலினால் அழுத்தித் தேய்த்தால் வழவழப்பாகும்.

* பருப்பை வேக வைக்கும் போது சிறிது எண்ணெயும், பெருங்காயமும் சேர்த்தால் பொங்கி வழியாமல், மணமாகவும் இருக்கும்.

* சமைத்த உணவை நீளமாக நறுக்கிய வெங்காயத்தால் அலங்கரிக்கும் போது சிறிது உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து வதக்கினால் வெங்காயம் துவண்டு விடாமல் நீண்ட நேரம் கிரிஸ்ப்பாக இருக்கும்.

* தக்காளி சூப் தயாரிக்கும்போது சிறிது கசகசாவை நெய்யில் வறுத்துப் பொடித்துப் போட்டால் சூப்பில் சுவையும், மணமும் சூப்பராக இருக்கும்.

- மல்லிகா

அன்பழகன்.