தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

* அறைக்கு நடுவே ஒரு ஸ்டூலில் நனைத்த டவலை போட்டு வைத்தால் ஃபேன் காற்றில் குளிர்ச்சி பரவி அறையில் ஏசி போட்டது போல இருக்கும்.

Advertisement

* உயரமான பாட்டிலில் ஊறுகாய் போட்டு வைத்தால் பாட்டிலின் அடியில் உள்ள ஊறுகாய் அதிக நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

* புடவை ஜரிகை மங்கி விட்டதா? கவலை வேண்டாம். அமோனியா கலந்த தண்ணீரில் ஒரு துணியை முக்கி, பார்டர் ஜரிகையில் லேசாக துடைத்தால் போதும் ஜரிகை பளிச்சிடும்.

* வாஷிங் மெஷின் பிளக்கை கண்டிப்பாக அடாப்டர் பின் அல்லது எக்ஸ்டன்ஷன் பின்னோடு பொருத்தக் கூடாது. இதனால் எர்த் கிடைக்காமல் ஷாக் அடிக்கலாம்.

* குண்டூசி டப்பாவுக்குள் சாக்பீஸை நுணுக்கிப் போட்டால் குண்டூசி துரு பிடிக்காமல் இருக்கும்.

* பட்டுப்புடவையில் எண்ணெய் சிந்திவிட்டால், அந்த இடத்தில் விபூதியை நன்கு தேய்த்து விட்டு, பிறகு உதறினால் எண்ணெய்க் கறை காணாமல் போகும்.

* ஈ தொல்லையா? கொதிக்கும் தண்ணீரில் சர்க்கரையை கரைத்து அதில் ஒரு அட்டையை நனைத்து தொங்க விட்டால் ஈக்கள் அதில் போய் ஒட்டிக் கொள்ளும்.

* படுக்கை விரிப்புகளையும், திரைச்சீலைகளையும் அடர்த்தியான நிறங்களில் தேர்வு செய்யாதீர்கள். அவை மனதில் எரிச்சலை உண்டுபண்ணும்.

* குழம்பு, சாம்பார் தாளிக்கும்போது, சமையல் எண்ணெயுடன் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்தால் நம் உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும்.

* வெளிநாட்டுக்கு அனுப்பும் தபால்கள், பார்சல்களில் முகவரி அழியாமல் இருக்க வாக்ஸ் பாலிஷை முகவரி மீது தடவுங்கள்.

* இரவில் ரசம் மீந்துவிட்டால் பித்தளைப் பாத்திரங்களின் மேல் ஊற்றி ஊறவைத்து தேய்த்தால் பாத்திரம் பளிச்சிடும்.

* காப்பர் பாட்டம் பாத்திரம் மங்கிவிட்டால் கொஞ்சம் வினிகரையும், உப்பையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாலீஷ் ஏறி மின்னும்.

* காய்கறி சீவியை கழுவும் முன்பு பல் தேய்க்கும் பிரஷ்ஷால் தேய்த்தால் அதிலுள்ள துகள்கள் நீங்கும்.

* பூட்டு துரு பிடித்து விட்டால் சாவிக்கு எண்ணெய் போட்டால் போதும். எளிதில் திறக்க வரும்.

* கண்ணாடிப் பொருட்களை ஒரு துண்டு உருளைக் கிழங்கால் நன்கு தேய்த்து துடைத்தால் பளபளக்கும்.

* பால் பாத்திரங்களின் அடியில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* கற்பூரத்தை நுணுக்கி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து வாரம் ஒரு முறை டைனிங் டேபிளைத் துடைத்தால் துர்நாற்றம் நீங்கும்.

* ஆரஞ்சு பழத்தோலை காய வைத்து நெருப்பில் சுட்டு வீட்டின் ஒரு ஓரத்தில் வைத்தால் போதும். கொசுக்கள் எல்லாம் வெளியே தெறித்தோடும்.

* டூத் பிரஷ்ஷை வாரம் ஒரு முறை வெந்நீரில் ஊறவைத்து கழுவி உபயோகிக்க வேண்டும். இது ஆரோக்கியத்திற்கு நல்லது.

- அ. யாழினி பர்வதம்.

 

Advertisement

Related News