குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!
* பழைய புளி உடல் சூட்டை அதிகம் செய்தாலும், கண் நோயை குணமாக்கும். வாதப் பிரச்னைகளைக் குறைக்கும். புதுப்புளி உடல் வலுவைக் குறைக்கும். முடியை நரைக்கவும் செய்யும்.
* முருங்கைப் பூ கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.
* பலாக்காய் உடல் சூட்டை சமன்படுத்தும். வாத, கப நோய்கள் உண்டாகும்.
* அவரைப் பிஞ்சு பெண்களின் சூதக வலியை குணமாக்கும்.
* பொன்னாங்கண்ணிக் கீரை கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
* மன அமைதி பெற மணத்தக்காளிக் கீரை நல்லது.
* வெந்தயத்தை அடிக்கடி சமையலில் சேர்த்தோ, ஊறவைத்தோ உண்பது சிறுநீரகக் கல் உண்டாகாமல் காக்கும்.
* கசகசா உடல் அரிப்பினைப் போக்கி நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.
v லவங்கப் பட்டை உண்ட உணவை செரிக்கச் செய்யும்.
* கொள்ளு பருப்பை சுண்டலாகவோ, ரசம் வைத்தோ உட்கொண்டால் மூட்டுகள் வலுவடையும். உடல் வலி போகும். ஊளைச் சதையைப் போக்கி எடை குறைய உதவும்.
* உளுந்து உடல் நலத்திற்கும், சதை வளர்ச்சிக்கும் நல்லது. குளிர்ச்சி தரும்.*உளுந்து வடை தயாரிக்க மாவு அரைக்கும் போது இரண்டு தேக்கரண்டி அரிசியை ஊறவைத்து அரைத்தால் வடை கரகரப்பாக இருக்கும்.
* மோர்க்குழம்பு செய்யும் போது ஊறவைத்த துவரம் பருப்பை அரைத்து சேர்ப்பதற்கு பதிலாக பொட்டுக் கடலையை அரைத்து சேர்க்கலாம்.
* ரசம் மணக்க வேண்டுமா? நெய்யில் கடுகு தாளித்து பெருங்காயத்தூள் போட்டு ரசத்தில் சேர்த்தால் போதும்.
* தேங்காய் சட்னி அரைக்கப் போகிறீர்களா? ஒரு தேக்கரண்டி துருவிய மாங்காய் சேர்த்தால் சுவையே தனிதான்.
* பனங்கிழங்கு உடலுக்கு வலுவையும், வனப்பையும், குளிர்ச்சியையும் தரும்.
* பாதாம் பருப்பு மூளைக்கு வலிமை தருவதோடு, புதுரத்தம் பெருக்கும்.
* நேந்திர வாழைப்பழம் இதயத்தை பலப்படுத்தும். ரத்தம் பெருகச் செய்யும்.
- விசாலாட்சி கண்ணன், ஒசூர்