தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை: எல்.முருகனுக்கு செல்லூர் ராஜூ பதிலடி

மதுரை: அதிமுக தனது கொள்கையில் இருந்து தவறாது. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாஜவுடன் அதிமுக கூட்டணி ைவத்தது கட்சியின் நிர்வாகிகள் மட்டுமின்றி அடிமட்டத் தொண்டர்கள் வரை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திராவிட சித்தாந்தத்தில் தோன்றிய அதிமுக, பாஜவுடன் கூட்டணி அமைத்து காவிமயமாகி வருவதாக நடுநிலையாளர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

இந்நிலையில், சென்னையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் பேசும்போது, ‘‘அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்தினால் என்ன தவறு? இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று நிருபர்களை சந்தித்தார்.

அவரிடம், ‘‘ஆர்எஸ்எஸ் வலிமை பெற அதிமுக துணைபோவது கவலை அளிப்பதாக தொல்.திருமாவளவன் கூறியிருந்தாரே’’ என கேட்க, செல்லூர் ராஜூவோ, ‘‘அதிமுக தனது கொள்கையில் இருந்து என்றும் வழுவாது. தவறாது. அது எல்லோருக்கும் தெரியும். எங்களுக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது.

அதன் அடிப்படையில் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழியில் நாங்களும் இருக்கிறோம். நாங்கள் யாருக்கும் எஜமானர் இல்லை. யாருக்கும் அடிமையும் இல்லை. எங்களுக்கும் எஜமானர் யாருமில்லை’’ என்றார். அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்தினால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கும் இதன்மூலம் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement