தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்கினிமலிசம் (Skinimalism) இளைஞர்களின் புது ட்ரெண்ட் !

“Skinimalism” என்பது “Skin Minimalism”(தோல் குறைவான) என்ற இரண்டு வார்த்தைகளின் கலவை. பல்லாயிரம் வருடங்களாக பெண்களின் சரும பராமரிப்பு அடிப்படையாகக் கொண்டு கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்தனர் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனங்கள். அதீத கெமிக்கல், செயற்கை நிறமி, சரும ப்ளீச்கள் , என அனைத்தும் சருமத்தை கூடுமானவரை அழகாக மாற்றுகிறதோஇல்லையோ சருமத்தை விரைவில் பக்க விளைவுகளுக்கு உட்படுத்தி அதற்கு தோல் மருத்துவர் நோக்கி ஓட வைத்துக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட சிக்கலான ஸ்கின்-கேர் வழிமுறைகளில் சிக்காமல், சரியான மற்றும் குறைந்த பட்ச தயாரிப்புகளுடன் தோல் பராமரிப்பை செய்யும் நுட்பம் தான் இந்த ஸ்கினி மலிசம். தேவையற்ற கிரீம்கள், சீரம்கள், ஜெல் வகைகள் இவற்றை தவிர்த்து ஒவ்வொரு சருமமும் தனித்துவம் ஆனது என்பதை புரிந்து கொண்டு அவரவர் தேவைக்கு ஏற்ற குறைவான ப்ராடக்டுகளுடன் சரும ஆரோக்கியத்தில் அக்கரை காட்டும் ட்ரெண்ட்.

Advertisement

முன்பு ஒரு பெண் வெளியில் கிளம்ப வேண்டுமென்றாலே டோனர், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் மாய்ச்சுரைசர், பிபி கிரீம், தொடர்ந்து சரும கறைகளை நீக்கி சீரான நிறத்தில் காட்ட பவுண்டேஷன், முக வடிவத்துக்கு கான்டோர் , மேக்கப், ஹைலைட்டர்கள், என அத்தனை வஸ்துகளும் தேவை. ஆனால் அவை இல்லாமல் இன்று வெறும் சன் ஸ்கிரீனிலேயே யார் யார் சருமத்துக்கு எப்படிப்பட்ட சன் ஸ்கிரீன் தேவையோ அப்படிப்பட்ட சன் ஸ்கிரீன் பயன்பாடுகள் வந்துவிட்டன. திருமணம் தவிர்த்து மற்ற வேலைகளில் அதீத மேக்கப்புகளை இன்றைய தலைமுறை விரும்புவதே கிடையாது. குறிப்பாக சிவப்பான நிறம், வெள்ளை நிறம் என்கிற மாய பிம்பம் உடைந்து மாசற்ற சருமம், ஆரோக்கியமான சருமம் , என காஸ்மெட்டிக்ஸ் மார்க்கெட் இன்று மாறி இருக்கிறது.

இதில் மிக முக்கியம் எந்த கிரீம் எந்த சீரம் பயன்படுத்தினாலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் நல்ல தூக்கமும் தான் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் என்பதையும் இக்கால தலைமுறையை உணர்ந்து செயல்படுகிறார்கள். இன்டர்நெட் வழியாகத்தான் இந்த அறிவு அதிகரித்திருக்கிறது என்கிறார் சரும நிபுணர் மற்றும் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக்.“எனக்கு மேக்கப் போட்ட மாதிரி தெரியக்கூடாது. டல் மேக்கப் வேண்டும். மேடம் எனக்கு என்னுடைய சரும நிறத்திலேயே மேக்கப் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. இப்படி மணப்பெண்களே கேட்கும் நிலை உருவாகி இருக்கு. அந்த அளவுக்கு இயற்கையான முகத்திற்கும் சரும நிறத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இளைஞர்களை பார்க்க முடிகிறது. முன்பு இந்த செல்பி மற்றும் புகைப்பட கலாச்சாரங்கள் எதுவும் கிடையாது. தங்களை தாங்களே பார்த்துக் கொள்ள ஒரே இடம் கண்ணாடி மட்டும் தான். அல்லது மற்றவர்கள் பார்த்து சொல்லும் கருத்துக்களை வைத்து தான் அவர்கள் சருமத்துக்கு தேவையான கிரீம்கள் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்துவதுண்டு.

இப்போது அனைத்தும் மாறிவிட்டது. தங்களை தாங்களே புகைப்படம் எடுத்து பார்த்து ரசிக்கும் மனநிலை உருவாகி இருப்பதால், சருமம் எப்படி இருக்கிறது என்ன ப்ராடக்ட் தேவை என கூகுள் செய்து பார்க்கும் அளவிற்கு இந்த தலைமுறை புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அதேபோல் அரோமா தெரபிஸ்ட் ஆக நானே எந்த ப்ராடக்டுகளை இப்போதைய தலைமுறைக்கு பரிந்துரை செய்தாலும் அது எதற்கு இதனால் என்ன பயன் இப்படி பலரும் கேட்கத் துவங்கியிருக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய விழிப்புணர்வு தான். மிக முக்கியம் அந்தந்த நாட்டின் கால நிலைக்கு எப்படிப்பட்ட காஸ்மெடிக்ஸ் தயாரிக்க வேண்டும் என்பது இங்கே இருக்கும் மருத்துவர்களுக்கும் காஸ்மெட்டிக் தயாரிப்பாளர்களுக்கும் தான் தெரியும். முன்பு வெளிநாட்டு ப்ராடக்டுகளின் ஆதிக்கம் நம் இந்திய தயாரிப்பை அடக்கிக் கொண்டிருந்தன. ஆனால் இன்று நிறைய இந்திய தயாரிப்புகள் மார்க்கெட்டில் பார்க்க முடிகிறது. இந்த ஸ்கினிமலிசம் அதிக கெமிக்கல் சார்ந்த காஸ்மெடிக்சுகளை குறைத்து எந்த சருமத்துக்கு எந்த அளவு கிரீம்கள் பயன்படுத்தினால் போதும் என்கிற மனநிலையை உருவாக்கி இருக்கிறது.

சிவப்பான நிறம் என்கிற விளம்பரங்களை சமீப காலமாக நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். குலோயிங் சருமம், ஈரப்பதமான சருமம், வறட்சி வேண்டாம் இப்படியான விளம்பரங்கள் வரத் துவங்கி இருக்கின்றன. மிக முக்கியம் 10 வருடங்களுக்கு முன்பு வரை இந்திய சரும நிறங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் நிறங்கள் கூட பார்க்க முடியாது. இப்போது எல்லோருக்கும் எல்லாமே இருக்கிறது. 90% பெண்களின் ஹேண்ட் பேக்கில் இன்று ஒரு சன் ஸ்கிரீன் மற்றும் ஒரு லிப்ஸ்டிக் பார்க்க முடிகிறது” இந்த ஸ்கினிமலிசம் என்னென்ன மாற்றங்களை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு வந்திருக்கிறது மேலும் தொடர்ந்தார் கீதா அசோக்.

*இந்த K-Beauty, 1012 படி ஸ்கின் ரோட்டின்களில் இருந்து ஓய்வு கொடுத்திருக்கிறது. இன்ஸ்டாகிராம், டிக்-டோக் போன்ற சமூக வலைதளங்களில் பலவிதமான படிநிலைகள் கொண்ட மேக்கப், சரும பராமரிப்புகள் இவை வீண் செலவு என்னும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

* இந்தத் தலைமுறையான Gen Z மற்றும் Millennials “சிக்கலற்ற, எளிமையான மற்றும் இயற்கையான தோல் பராமரிப்பை விரும்புகிறார்கள்.

* சுய பராமரிப்பு (Self-care) அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு சருமமும் தனித்துவம் வாய்ந்தது அவரவருக்கு என்ன ப்ராடக்ட் தேவை என்பதை புரிந்து வாங்கும் பழக்கம் உருவாகி இருக்கிறது.

*சருமம் சார்ந்து ஏற்படும் மனதளவிலான அழுத்தங்கள் குறைந்து இருக்கின்றன. அதிக தயாரிப்புகளை பயன்படுத்தாமல், தோல் பராமரிப்பு சுலபமாக மாறி இருக்கிறது.

* தாங்களே செய்து கொள்ளும் ( DIY) ஆரோக்கியமான சரும பராமரிப்புகள் மற்றும் பழங்கால அம்மா, பாட்டிகளின் வழக்கங்கள் தற்போது அதிகரித்திருக்கின்றன.

*என்ன சரும பராமரிப்பு ப்ராடக்டுகளை பயன்படுத்தினாலும் நாம் ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொண்டால் மட்டுமே நம் சருமம் வெளியே பளிச்சிடும் என்கிற புரிதல் உருவாகி இருக்கு.

* முன்பை விட தன் மீதான அக்கறை அதிகரித்து இருந்தாலும் அதை ஆரோக்கியமான வழியில் இக்கால தலைமுறை எதிர்கொள்கிறது.

* தேவையற்ற வெளிநாட்டு தயாரிப்புகள் தற்போது பெரிதாக விற்பனை ஆவதில்லை. அதேபோல் நம் இந்திய தயாரிப்புகளை இணைய பயனாளர்கள் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பதால் அனுபவ விமர்சனங்களாக மாறி யாருக்கு என்ன தேவையோ அதை எடுத்துக்கொள்கிறார்கள்.

* முன்பு SPF, pH அளவீடுகள் பற்றி மட்டும்தான் பேசுவார்கள். இப்போது விளம்பரங்களிலேயே AHAs ( Alpha-hydroxy acids) BHAs( beta-hydroxy acids) விவரங்களும் சேர்த்து வருவது மிகப்பெரிய மாற்றம்.

* குறிப்பாக ஒரு காலத்தில் சன் ஸ்கிரீன் ஆடம்பரம் வஸ்துவாக பார்க்கப்பட்டது. ஆனால் ஃபேர்னஸ் கிரீம்கள் அத்தியாவசியமாக இருந்தன. அந்த நிலை முற்றிலும் மாறி இருக்கிறது.

இப்படி அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக் நிறைவு செய்ய ஸ்கினிமலிசம் இந்திய காஸ்மெட்டிக் மார்க்கெட்டில் எப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது என டேட்டாக்களை ஆராய்ந்ததில். (cluttered conscious, quantity quality, trend-based science-based ) இந்த மனநிலை உருவாகியிருக்கிறது. மார்க்கெட்டில் டாப் பிராண்ட், அதிக செலவு, ட்ரெண்டிங்கில் டாப் இவையெல்லாம் மாறி எதிலும் அக்கறை, தரம், அறிவியல் பூர்வமாக உணர்ந்து தயாரிப்புகளை வாங்கும் மனநிலை என மாறியிருக்கிறது. இதனால் இந்திய காஸ்மெட்டிக் விற்பனை 1012% உயர்ந்திருக்கிறது. “foundation heavy contour highlighter lipstick” விட, “SPF tinted moisturizer lip balm போதும் என இளைஞர்கள் மாறியிருக்கிறார்கள். இதற்கு காரணம் கொரோனா காலகட்டம் தான். சுமார் மூன்று வருட காலங்கள் எந்த காஸ்மெட்டிக்ஸ் ப்ராடக்டுகளும் இல்லாமல் வீட்டுக்குள் அடைந்ததன் விளைவு இயற்கையான சருமத்தின் அழகை உணரத் துவங்கினார்கள் நுகர்வோர். மேலும் சரும நிபுணர்களின் நேரடியான வீடியோக்கள், பயனாளர்களின் நேரடி அனுபவக் கருத்துக்கள் என தமக்கு என்ன தேவை என்பதை உணர வைத்தது. இந்தியாவில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் ஸ்கினிமலிசம் பெரும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

- ஷாலினி நியூட்டன்.

Advertisement