திறன்மிகு நெசவாளர் விருதுக்கு தேர்வு 60 விருதாளர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று கலைவாணர் அரங்கத்தில் 11வது தேசிய கைத்தறி நாள் விழா நடந்தது. நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு மேம்படுத்தப்பட்ட மின் வணிக தளத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார். மேலும், 2024-25ம் ஆண்டில் சிறந்த வேலைப்பாடு கொண்ட ரகங்களை திறம்பட நெசவு செய்த நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையில், 60 விருதாளர்களுக்கு மொத்தம் ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் திறன்மிகு நெசவாளர் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் நெசவாளர்களுக்கான வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.1 கோடி மானியத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் நெசவாளர் நலத்திட்டங்களின் கீழ் 158 ேபருக்கு ரூ.2.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.