தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவ.2ம் தேதி அதிகரித்த வெப்பம்

சென்னை: மேற்கு திசையில் இருந்து வறண்ட வெப்பக் காற்று வீசுவதால் நவம்பர் மாதத்தில் 26 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச வெப்பம் நேற்றுமுன்தினம் பதிவாகியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:  மோன்தா புயல் தமிழக கடலோரத்தை கடந்து சென்ற நிலையில், நவம்பர் மாதத் தொடக்கத்தில் 2ம் தேதியே சென்னை நுங்கம்பாக்கத்தில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இது 26 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதியில் பதிவான 35 டிகிரி வெப்பத்தைவிட அதிகமாக கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குறிப்பாக 2025ம் ஆண்டு அக்டோபர் இறுதிநாளான 31ம் தேதி 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேற்கு திசையில் இருந்து தரைக் காற்றில் ஈரப்பதம் இல்லாமல் வீசியதால் வெப்பநிலை உயர்ந்துள்ளது. மியான்மர் பகுதியில் இருந்து ஒரு காற்று சுழற்சி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு மற்றும் வட மேற்கு திசை வழியாக வட மாநிலப்பகுதியில் இருந்து காற்று வீசிக் கொண்டு இருக்கிறது. இதன் விளைவாக சென்னை, மதுரை, வேலூர், உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த வெப்பநிலை நிலை இன்று வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மீனம்பாக்கம், வேலூர் மற்றும் மதுரை விமான நிலையம் பகுதிகளி்ல நவம்பர் மாதத்தில் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக 35.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி 35.6 டிகிரி வெப்பநிலையை விட இது குறைவானது. வேலூரில் 35.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது கடந்த 1970ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி பதிவான 35.8 டிகிரி செல்சியசை விட குறைவு. அதேபோல மதுரை விமான நிலையத்தில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.

இது கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதியில் பதிவான 39.4 டிகிரி செல்சியசை விடக் குறைவு. சென்னை நுங்கம்பாக்கத்தில் இயல்பைவிட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், மீனம்பாக்கத்தில் 4.4 டிகிரி செல்சியஸ் விலகலாகவும் பதிவாகியுள்ளது. நவம்பர் 1ம் தேதி கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 5.4 டிகிரி செல்சியசும், நாகப்பட்டினம் 5 டிகிரி செல்சியசும், பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும் போது, பொதுவாக மேற்கண்ட வெப்பநிலை சாதாரணமாகக் கருதப்படுவதில்லை என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நவம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Advertisement

Related News