கடலூர் : நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகுவதாக கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சீமான் தெரிவித்துள்ளார். சிவகுமார் உடன் நாம் தமிழர் கட்சி மாநில சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முகமது அலி ஜின்னா,தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணைத்தலைவர் வினோத்குமார் ஆகியோரும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். நாம் தமிழர் கட்சியில் பல மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர், சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அக்காட்சியில் இருந்து விலகிய ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் தெரிவித்தார்.