தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகாசியில் ஆய்வுக்கு அஞ்சி மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் 9 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு

விருதுநகர்: சிவகாசியில் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால், 200க்கும் மேற்பட்ட ஆலைகள் 9 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டன. ஆய்வு செய்வதற்கு 15 குழுக்கள் அமைக்கப்பட, ஆய்வுக்கு அஞ்சி இந்த ஆலைகளை அதன் நிர்வாகத்தினரே மூடி வைத்திருந்தனர்.
Advertisement

அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து சம்பவங்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே 2023ல் விருதுநகர் கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் வழக்கை விசாரித்தது.

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வு செய்ய அதிகாரிகள் செல்லும்போது பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் ஆலைகளை மூடி விட்டு சென்று விடுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் பட்டாசு ஆலை உரிமையாளர் சங்கம், தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலரை சேர்க்க உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளில் தொழிலாளர்கள் பலியாவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று 9 நாட்கள் கழித்து பட்டாசு ஆலைகளை உரிமையாளர்கள் திறந்துள்ளனர்.

Advertisement

Related News