தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகிரி அருகே பராமரிப்பின்றி உருக்குலைந்த தேவிப்பட்டணம்-செங்குளம் சாலையில் தொடரும் விபத்துகள்

*விவசாயிகள், தொழிலாளர்கள் கடும் அவதி

Advertisement

சிவகிரி : சிவகிரி அருகே முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்த தேவிப்பட்டணம்- செங்குளம் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் கடும் அவதிக்கு உள்ளாகும் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் விரைவில் சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் எல்லை பகுதியில் சிவகிரி அருகே தேவிப்பட்டணத்தில் இருந்து செங்குளத்திற்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.

இந்த சாலை வழியாகத்தான் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு செல்ல முடியும்.இப்பகுதியில் தென்னை, வாழை, மா, பலா கொய்யா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தினமும் விவசாயிகளும், தொழிலாளர்களும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். மேலும் விளைபொருட்கள் மற்றும் உரங்கள், விதைகளை டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் தேவிபட்டணம் பஸ் நிலையத்தில் இருந்து செங்குளம் வழியாக சாலை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் போதிய பராமரிப்பு பணிகள் இல்லாததால் சாலை உருக்குலைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆபத்தான சாலையில் விவசாயிகள் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ள நிலையில் விவசாயிகள் செல்வதற்கான சாலை பராமரிப்பு இல்லாமல் இருப்பது வேதனையை ஏற்படுத்தி வருகிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News