சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்
03:42 PM Jul 04, 2024 IST
Share
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். நாச்சிக்குளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா (25), சுபாஷ் (23) ஆகியோர் கடந்த 30-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 4 பேர் சிவகங்கை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.