சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கார்த்தி சிதம்பரத்திற்கு இன்று (நேற்று) காலை மருத்துவர் சந்தோஷ் ஆனந்த் தலைமையில் மருத்துவ குழு சிறிய அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் உடல்நிலை நன்றாக உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement