கல்குவாரி குட்டையில் சடலம் மீட்பு; கடனை திருப்பி கேட்ட அக்காவை கழுத்தை நெரித்துக் கொன்ற தம்பி: 4 பேர் அதிரடி கைது
இறந்து போன சுதாவிடம் தம்பி மணிகண்டன் அவ்வப்போது சிறு சிறு தொகை கடனாக சுமார் ரூ.50 ஆயிரம் வரை வாங்கியுள்ளார். இந்த தொகையை சுதா, மணிகண்டனிடம் திரும்ப கேட்டுள்ளார். இதனால் மணிகண்டன் சுதாவின் நடத்தை குறித்து இழிவாக பேசி கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுதா, தான் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது மனைவி பவித்ராவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் சுதாவை வரவழைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். மணிகண்டன் தன்னுடன் கொத்தனாராக வேலை பார்க்கும் அசோக்குமாரை, தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அதுபோலவே பவித்ரா தன்னுடன் பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் தோழி கதீஜாவை வரவழைத்துள்ளார். சம்பவத்தன்று தனது அக்கா சுதாவை போனில் தொடர்பு கொண்ட மணிகண்டன், பணம் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். டூவீலரில் வீட்டுக்கு வந்த சுதாவை 4 பேரும் சேர்ந்து முகத்தில் பாலித்தீன் பையை போட்டு கட்டியுள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்து சுதாவை கொலை செய்துள்ளனர். பின்னர் கதீஜாவின் நண்பருக்கு சொந்தமான வேனை எடுத்துவந்து, அதில் சுதாவின் சடலத்தை போட்டு, ஏமப்பள்ளி அருகே குவாரி குட்டையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். மேலும், சுதாவின் டூவீலரை எடுத்துச்சென்ற கதீஜா, தனியாரிடம் அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார்.
இதையடுத்து கொலையாளிகள் மணிகண்டன் (28), அவரது மனைவி பவித்ரா (25), மணிகண்டனின் நண்பர் அசோக்குமார் (31), பவித்ராவின் தோழி கதீஜா (23) ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார், நான்கு பேரையும் குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 5 மாதத்திற்கு பிறகு இந்த கொலை சம்பவத்தில் துப்புதுலக்கி கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளது. குறிப்பிடத்தக்கது.