எஸ்ஐஆர் பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், “திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்” இன்று காலை 10 மணியளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்ட செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement