நிரம்பும் நிலையில் சிறுவாணி அணை
09:08 AM Jul 26, 2024 IST
Advertisement
கோவை: தொடர்மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது. 45 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையின் தற்போதைய நீர்மட்டம் 43 அடியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடைமழை பெய்வதால் சிறுவாணி அணை ஓரிரு நாட்களில் நிரம்பும் என தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement