சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா: கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் வீதியுலா
சிகர நிகழ்ச்சயான கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை மற்றும் கயிறு சுற்றி ஆடுதல், இரவு 10 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், நள்ளிரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மத்தாப்பு, வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் மேளதாளங்களுடன் கற்பக பொன்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி நகர் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கொடை விழாவை முன்னிட்டு காலை, மதியம், இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (28ம்தேதி) காலை 8 மணிக்கு வெளியே உலா சென்ற அம்மன் கோயில் வந்து அமர்தல், 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிறுத்தொண்டநல்லூர் நான்கு பங்கு இந்துநாடார்கள் செய்து உள்ளனர்.