சீர்காழியில் ஊசி போட்ட 30 கர்ப்பிணிகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதால் அதிர்ச்சி!!
கடலூர்: சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட 30 கர்ப்பிணிகளுக்கு நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றவர்களுக்கு ஊசி போட்டவுடன் நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் ஏற்பட்ட கர்ப்பிணிகளுக்கு உடனடியாக மாற்று மருந்து வழங்கப்பட்டதால் உடல்நிலை சீரானது. மாற்று மருந்து வழங்கி உடல்நிலை சீராகாத 2 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளுக்கு போட்ட ஊசி, மருந்து பற்றி ஆய்வு செய்து வருவதாக தலைமை மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement