சீர்காழியில் மாற்று மருந்து செலுத்தப்பட்ட கர்ப்பிணிகள் நலமுடன் உள்ளனர்: மருத்துவமனை அறிக்கை வெளியீடு
சீர்காழி: சீர்காழியில் மாற்று மருந்து செலுத்தப்பட்ட 27 கர்ப்பிணிகளும் நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். சீர்காழி அரசு மருத்துவமனையில் நேற்று ஊசி போட்டுக் கொண்ட 27 கர்ப்பிணிகளுக்கு உடல் நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டது.
காய்ச்சல் ஏற்பட்ட கர்ப்பிணிகளுக்கு உடனடியாக மாற்று மருந்து வழங்கப்பட்டதால் உடல்நிலை சீரானது. கர்ப்பிணிகளிடம் உடல் நலம் குறித்து ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் கேட்டறிந்தனர். கர்ப்பிணிகளுக்கு செலுத்திய செஃபோடாக்சிம் எனும் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
சீர்காழி அரசு மருத்துவமனையில் 17.09.2025 அன்று மகப்பேறு பிரிவில் 27 கர்பிணி பெண்கள் மற்றும் 20 பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 17.09.2025 அன்று 27 பயனாளிகளுக்கு காலையில் மருந்துகள், மாத்திரைகள் ( Cefotaxim, ceftrioxzone) வழங்கப்பட்டது. பின்பு அதே பயனாளிகளுக்கு பிற்பகல் மாலை 8.30 -க்கு மருந்துகள், மாத்திரைகள் (Cefatuxim, ceftrioxzone) வழங்கப்பட்டது.
மாலை 8.30 -க்கு மருந்துகள், மாத்திரைகள் ( Cefataxim, ceftrioxzone) வழங்கப்பட்ட சில மணித்துளிகளில் 27 பயனாளிகளுக்கும் குளிர்காய்ச்சல் (Fever & Chils) ஏற்ப்பட்டது. இத்தகவல் உடனடியாக தலைமை மருத்துவர்க்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக மருத்துவ குழுவினரால் 27 பயனாளிகளுக்கும் மாற்று மருந்துகளான Inj.Chlorphereramine, Inj. Dexamethasone, Inj.Hydrocartisone வழங்கப்பட்டது.
ஆதனில் பிரசவத்திற்க்காக அனமதிக்கப்பட்ட 09 கர்பிணி தாய்மார்களில் ஒருவருக்கு Premature என்பதால் அவருக்கு மாற்று மருந்துகளான Inj. Chlorphereramine, Dexamethasone, Inj.Hydrocartisone வழங்கப்பட்டு அருகில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிதம்பரத்திற்க்கு மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
பின்னர் 2 மணி நேரத்திற்க்கு பின்னர் மருத்துவக்குழுவால் ஆய்வு செய்ததனில் அனைத்து பயனாளிகளும் நல்ல உடன் தகுதியுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 18.09.2025 தேதியான இன்று அதே மருத்துவக்குழுவால் அனைத்து பயனாளிகளும் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கான அனைத்து மருந்து மற்றும் மாத்திரைகளும் வழங்கப்பட்டு நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர் 8.30 மு.ப மணி அளவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மயிலாடுதுறை இணை இயக்குநர் நலப்பணிகள் அவர்களால் அனைத்து பயனாளிகளின் உடல் நிலை மற்றும் சிக்சையினை கேட்டறிப்பட்டு . இம்மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறை வழங்கப்பட்டது