தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கியது
சென்னை: தமிழகம், புதுவையில் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கியது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே எஸ்ஐஆர் பணிகள் தொடங்கியது. ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக வீடு வீடாக சென்று படிவம் கொடுக்கும் பணி தொடங்கியது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று தேர்தல் அலுவலர்கள் விண்ணப்பம் அளித்தனர்.திருச்சியில் தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று திருத்தப் பணிக்கான விண்ணப்பங்களை அளிக்கின்றனர்.
அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளுடன் இணைந்து அரசு ஊழியர்கள் வாக்காளர்களை கணக்கெடுக்கவுள்ளனர். மக்கள் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் வீடு வீடாக சென்று அதிகாரிகளே பெற்றுக் கொள்வார்கள். டிசம்பர் 4 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று பணி மேற்கொள்வார். எஸ்.ஐ.ஆர். பணி முடிந்த பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள டிச.9 முதல் ஜனவரி 1 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.