எஸ்ஐஆர் பணியில் முறைகேடுக்கு வாய்ப்பு: கிருஷ்ணசாமி பேட்டி
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ராமேஸ்வரம் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. கவுரவ கொலையை தடுக்க சட்டம் கொண்டு வந்தது போன்று, கட்டாயக் காதல், கட்டாய திருமணத்தை தடுக்க சட்டம் இயற்ற வேணடும். தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியின மக்கள் வாழும் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணித்துள்ளனர். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஒரு மாதத்தில் செய்து முடிக்க முடியுமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசியல் கட்சி பிரதிநிதிகளை கொண்டு இந்த பணியை மேற்கொள்வதால் முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது. எனவே, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கொண்டு இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும். இப்பணியில் மாநில அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, ஒன்றிய அரசு ஊழியர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.