எஸ்ஐஆருக்கு ஆதரவா? பதில் சொல்லாத ஓபிஎஸ்
அவனியாபுரம்: சென்னையில் இருந்து நேற்று மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், விமான நிலையத்தில் ‘‘மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என நீங்கள் கூறினீர்கள். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அவரது ஆட்சிக் காலத்தில் தேனும், பாலும் ஆறாக ஓடியதா என கேட்டுள்ளார்.
Advertisement
இதுகுறித்து தங்களின் கருத்து’’ என கேட்டபோது, ‘‘நாங்கள் அப்போது அதனை நிறுத்தி விட்டோம்’’ என்றார். அடுத்ததாக, ‘எஸ்ஐஆர் பணிகளுக்கு அதிமுக ஆதரவாக இருக்கிறது. நீங்களும் ஆதரவு அளிக்கிறீர்களா’ என்ற கேள்விக்கு, எந்த பதிலும் கூறாமல் வேகமாக வெளியேறினார்.
Advertisement