எஸ்ஐஆர்: ரேஷன் கார்டை ஆதாரமாக ஏற்க வலியுறுத்தல்
கொல்கத்தா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ரேஷன் கார்ட்டை ஆதாரமாக ஏற்க கம்யூ. கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. மேற்கு வங்கத்தில், இடது சாரி கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆர்எஸ்பி, ஏஐஎப்பி, சிபிஐ(எம்எல்)சார்பில்அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த மனுவில்,‘‘ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவை தகுதியான வாக்காளர்களின் சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐ.ஆர்) என்பது குடியுரிமையை சரிபார்ப்பதற்கான ஒரு பயிற்சி அல்ல என்பதை தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்த வேண்டும். உண்மையான வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பதையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement