எஸ்.ஐ.ஆர். பணியில் குளறுபடி.. வாக்காளர் பட்டியலில் யார் பெயரையும் நீக்க விடமாட்டோம்: ஜெயக்குமார் பேட்டி
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடி நடப்பதாக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தபின் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; கணக்கெடுப்பு படிவங்களை அரசியல் கட்சியினர் மிரட்டி வாங்குவதாக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி அலுவலர்கள்தான் படிவங்களை கொடுக்கவும் வேண்டும்; பெறவும் வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து யார் பெயரையும் அதிமுக நீக்க விடாது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்தான் கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க வேண்டும். தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் செயல்பட வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள் முறையாக செயல்பட்டால் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வாக்காளர் பட்டியல் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.