தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர். மூலம் ‘இந்தியா’ கூட்டணி வென்ற தொகுதிகளில் வாக்குகளை நீக்க பாஜ பகிரங்க சதி: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் எஸ்ஐஆர். மூலம் ‘இந்தியா’ கூட்டணி வென்ற தொகுதிகளில் வாக்குகளை நீக்க பாஜ பகிரங்க சதியில் ஈடுபட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் 2ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (எஸ்ஐஆ) நடந்து வருகிறது. இதற்கான பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகளை சமாஜ்வாடி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து லக்னோவில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் கமிஷனுடன் இணைந்து பாஜ மிகப்பெரிய திட்டத்தை தீட்டி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடியும், ‘இந்தியா’ கூட்டணியும் வெற்றி பெற்ற இடங்களில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை நீக்க முடிவு செய்துள்ளனர். எனவே நாங்கள் உஷாராக இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேசத்தில் பாஜ தோல்வியடைந்ததால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் சதியில் இறங்கி இருக்கிறது’ என்றார்.

Advertisement

Related News