எஸ்.ஐ.ஆருக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!
டெல்லி: எஸ்.ஐ.ஆருக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். பணிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை என்பது வாக்குரிமையை பறிப்பதாக அமையும். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனையடுத்து எஸ்.ஐ.ஆருக்கு தடை விதிக்க அரசியல் காட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை வரும் நவம்பர் 26 தேதிக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உச்சநீதிமன்றம் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மல்யா பக்சி, பார்த்தி ஆகியோர் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் எஸ்.ஐ.ஆர். பணிகளை ஒத்திவைக்க அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளன. கேரளாவில் டிசம்பர் 9, 11ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.