எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 50% திரும்பப் பெறப்பட்டுள்ளன: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி
சென்னை: எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 50% திரும்பப் பெறப்பட்டுள்ளன என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டியளித்துள்ளார். அதில்,
50% எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன:
விசாரணை இல்லாமல் எந்த வாக்காளரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது.எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 50% திரும்பப் பெறப்பட்டுள்ளன. 2.43 லட்சம் தேர்தல் பணியாளர்கள் `SIR' பணியில் ஈடுபட்டுள்ளனர்"
கூடுதல் அவகாசம் கிடையாது
தமிழ்நாட்டில் இதுவரை 6.16 கோடி வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. டிச.4க்குள் எஸ்.ஐ. படிவங்களை திரும்ப அளிக்க வேண்டும், கூடுதல் அவகாசம் வழங்கப்படாது.
சென்னையில் 96% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம்
பிற மாநிலங்களைச் சேர்ந்த 869 பேர் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை பெற அளித்துள்ளனர் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். வெளி மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்துள்ளவர்கள் படிவம் 8-ஐ கொடுத்து வாக்காளர்களாக இணையலாம். பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம். சென்னையில் 96.27 சதவீதம் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக ஆன்லைன் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
எஸ்.ஐ.ஆர். பணிக்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ்.ஐ.ஆர். பட்டியலில் நிச்சயம் பெயர் இடம்பெறும். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது.