தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம்

 

Advertisement

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. தமிழ்நாடு, நாட்டிலேயே கல்வி வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களை காட்டிலும் கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் தமிழகம் தொழில்வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக மாற்றவும், தமிழக இளைஞர்களுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும், 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தை பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கான முயற்சியாக தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஏராளமான சிப்காட் எனப்படும் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்ட வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் 23 சிப்காட் தொழிற்பூங்காக்களே இருந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 வருடங்களிலேயே 30க்கும் மேற்பட்ட சிப்காட் பூங்காக்கள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து எடுத்து வருகிறது. தற்போது 40 தொழில் பூங்காக்கள் உள்ள நிலையில் மேலும் 21 பூங்காக்களை 21,404 ஏக்கர் பரப்பளவில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி காஞ்சிபுரம், மதுரையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு அருகே 422.33 ஏக்கரில் ரூ.530 கோடியில் சிப்காட் தொழில் பூங்கா அமைகிறது. காஞ்சிபுரம் சிப்காட் தொழில் பூங்கா மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மதுரை மாவட்டத்தில் வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்கலம் ஆகிய 3 கிராமங்களில் 278.26 ஏக்கரில் சிப்காட் பூங்கா அமைகிறது. ரூ.68 கோடியில் அமைய உள்ள சிப்காட் தொழில் பூங்கா மூலம் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

 

Advertisement

Related News