தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடு முழுவதும் இயங்கும் 1,04,125 ஓராசிரியர் பள்ளிகள்; 33 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: ஒன்றிய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2024-25 கல்வியாண்டில் மட்டும் 1,04,125 ஓராசிரியர் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் 33,76,769 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், அவை இன்னும் நீடிப்பது நாட்டின் கல்வி முறையில் உள்ள பெரும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

Advertisement

இந்த பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் 12,912 பள்ளிகளுடன் முதலிடத்திலும், உத்தரப் பிரதேசம் (9,508), ஜார்கண்ட் (9,172) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. அதேநேரம், ஓராசிரியர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் (6,24,327) முதலிடத்தில் உள்ளது. புதுச்சேரி, லடாக், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, சண்டிகர் ஆகிய பகுதிகளில் ஓராசிரியர் பள்ளிகளே இல்லை. கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு, ஆசிரியர் பற்றாக்குறை, தொலைதூரப் பகுதிகளுக்கு ஆசிரியர்கள் செல்ல விருப்பமின்மை மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமை போன்ற காரணங்கள் உள்ளன.

இந்நிலையில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருவதாக கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை ஒன்றிணைப்பது, உபரியாக உள்ள ஆசிரியர்களை ஓராசிரியர் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்வது போன்ற செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும், ‘சமக்ர சிக்‌ஷா’ திட்டத்தின் மூலம் ஆசிரியர் நியமனம் மற்றும் பயிற்சிக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. ‘வித்யாஞ்சலி’ திட்டம் மூலம் சமூக பங்களிப்புடன் பள்ளிகளை வலுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

Advertisement

Related News