உதவி இயக்குனர் கொலை மிரட்டல்: பாடகர் எஸ்.பி.பி.சரண் புகார்
சென்னை: மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவரது மகன் திரைப்பட நடிகர், பாடகர் எஸ்.பி.பி சரண் (எ) கல்யாண் சரண். இவருக்கு சொந்தமாக சாலிகிராமம் சத்யா நகரில் ஒரு வீடு இருக்கிறது. இந்த வீட்டை திரைப்பட உதவி இயக்குனர் திருஞானம் என்பவருக்கு கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாடகைக்கு விட்டுள்ளார். முன்பணம் ரூ.1,50,000 மற்றும் மாத வாடகை ரூ.35,000 என பேசி வீட்டை வாடகைக்கு விட்டார். ஆனால் வீட்டிற்கு வாடகை பணம் கொடுக்காமலும் முன் பணமாக கொடுத்த ரூ. 1,50,000 பணத்தையே கல்யாண் சரண் கழித்து கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் 23 மாதங்களாக திருஞானம் வாடகை கொடுக்கவில்லை, வாடகை பணம் தராமல் திருஞானம் அலைக்கழித்துள்ளார். இது குறித்து பாடகர் கல்யாண் சரண் கேட்ட போது ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்யாண் சரண் கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.