சிங்கப்பூரில் 2 இந்தியர்களுக்கு 5 ஆண்டு சிறை
சிங்கப்பூர்: இந்தியாவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுலாவுக்காக சிங்கப்பூர் சென்றனர். அங்கு ‘லிட்டில் இந்தியா’ பகுதியில்2 பாலியல் தொழிலாளிகளை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் வழங்கித் தீர்ப்பளித்தது.
Advertisement
Advertisement