சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று காலை வெளிநாட்டில் இருந்து ஒரு இ-மெயில் வந்தது. அதில் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியதும் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பரபரப்படைந்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், விமானத்தை அவசரமாக தரையிறங்க வைத்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள், அதிரடி படையினர் விமானத்தில் தீவிரமாக சோதனையிட்டனர். ஆனால் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து சென்னை மாநகர சைபர் க்ரைம் பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement