தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் - சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. சிங்கப்பூர் உள் அரங்க வளாகத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. ஆண்கள் இரட்டையர் பிரிவில் டென்மார்க்கின் டேனியர் லுண்ட்கார்ட் - மேட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியுடன் (34வது ரேங்க்) மோதிய நம்பர் 1 சாத்விக் - சிராஜ் இணை 20-22, 18-21 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டம் 47 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவுமுதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யபை 46 நிமிடங்களில் 19-21, 20-22 என்ற நேர் செட்களில் தாய்லாந்து வீராங்கனை போர்ன்பிச்சா சோயிகிவாங் வீழ்த்தினார்.
Advertisement

மகளிர் இரட்டையர் பிரிவில் அஷித் சூர்யா - அம்ருதா பிரமுதேஷ், ரூத்பர்னா பண்டா - ஸ்வேதபர்னா பண்டா ஜோடிகளும் ஏமாற்றமளித்தன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மற்றொரு இந்திய வீரர் பிரியன்ஷு ராஜ்வத்தும் தோல்வியை தழுவினார். முதல் சுற்றில் நேற்று இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், இன்று நடைபெறும் ஒற்றையர் ஆட்டங்களில் கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், எச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து கலப்பு இரட்டையர் பிரிவில் சதீஷ்குமார் கருணாகரன்/அதா வாரியத், சுமிதிரெட்டி/சிக்கி ரெட்டி, மகளிர் இரட்டையர் பிரிவில் சிம்ரன் சிங்/ரிதிகா தாக்கர், தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா, த்ரீஷா ஜாலி/காயத்ரி கோபிசந்த், ஆண்கள் இரட்டையர் பிரிவில் கிருஷ்ண பிரசாத் காரகா/சாய் பிரதீக் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

 

Advertisement

Related News