தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிந்தித்ததை செயல்படுத்துங்கள்!

ஒருவருடைய வெற்றி அவருடைய சிந்தனையில் இருந்து தான் உருவாகிறது. சிந்தனை விதைகளே செயல்களாக வளர்ந்து வெற்றியாக மலர்கின்றன.ஆகவே வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற விரும்பினால் முதலில் சிந்தித்து பழக வேண்டும். மனதை வெற்றிடமாக வைக்காமல் சிந்தனையால் நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் எவ்வாறு உள்ளது அவற்றை இன்னும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என சிந்தித்துப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுபோல அளவாகவும் விவேகமாகவும் சிந்திக்க வேண்டும். ஆற்றங்கரையின் ஓரத்தில் தோண்டப்பட்டுள்ள சிறிய ஊற்றிலிருந்து நீரை எடுத்துப் பருக வேண்டும் என்றால் மேலே உள்ள தெளிந்த நீரை மட்டுமே கவனமாக எடுத்துப் பருக வேண்டும்.

Advertisement

அவ்வாறு இல்லாமல், ஆழமாகக் கையை விட்டால், நீரும் குழம்பி வீணாவதோடு, நமது தாகமும் தீராது. அதுபோல, உங்கள் மனம் பக்குவமாகவும், தேவையான அளவுமே சிந்தனையில் மூழ்க வேண்டும்.மேலும் சிந்தித்து செயல்படுத்த முடிவெடுத்து முனைப்புடன் செயல்பட வேண்டும். ஆனால் முடிவெடுக்க முடியாத சூழ்நிலையும் நமக்கு குழப்பம் உண்டாகும். வாழ்வில் வெற்றி பெற்ற அனைவரிடமே சில பொதுவான குணங்கள் இருக்கும். அவற்றில் ஒன்று விரைந்து முடிவெடுக்கும் தன்மை.மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு பறவை, பறக்க நினைக்கும் போது உடனே தன் சிறகுகளை விரித்துக் கிளம்பி விடுகிறது. காற்றை நம்பி பறப்பதா வேண்டாமா என்று அது யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதில்லை. தண்ணீருக்குள் போட்ட உடனே மீன் குஞ்சுகள் நீந்தத் தொடங்கி விடுகின்றன. அவை அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதில்லை.மனிதன் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் யோசித்துக் கொண்டிருக்கின்றான்.முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்த பிறகும் யோசிப்பது என்பது முட்டாள்தனமானது. தோல்வி தரக்கூடியது, நம்முடைய முடிவு தவறாக அமைந்து விடுமோ என்ற பயம் விரைந்து முடிவெடுப்பதைத் தடுக்கலாம். ஆனால் வெற்றி பெற விரும்புபவர்கள் மதில் மேல் பூனையாக உட்காருவதே இல்லை.

சரி, ஒரு வேளை எடுக்கின்ற முடிவு தவறாக அமைந்துவிட்டால்? இந்த பயம்தான் விரைந்து முடிவெடுப்பதிலிருந்து மனிதனை தடுக்கிறது. ஆனால் இந்த பயம் அர்த்தமற்றது. ஏனெனில் விரைந்து எடுக்கப்படும் முடிவுகள் தவறாகவே போனாலும் அது சரிதான் என்கிறார்கள் வெற்றியாளர்கள்! ஆமாம் ஹென்றி ஃபோர்டு ஒரு முடிவை ரொம்ப விரைவாக எடுப்பார். எடுத்த பிறகு யார் சொல்வதற்காகவும் அதை மாற்றிக்கொள்ள மாட்டாராம். மாடல் டி என்ற காரை அவர் வடிவமைத்தார். அந்த மாடலை மாற்றச் சொல்லி நிபுணர்களும் கார் வாங்குபவர்களுமாக பலர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இவ்வளவுக்கும் அந்த மாடல் டி கார் பார்க்க சுமாரான ஒரு கார். ஆனால் அதுதான் கோடி

கோடியாக விற்றுத் தீர்ந்தது.

விரைந்து முடிவெடுத்துவிட்டு பாதியில் விட்டுவிட்டு செல்பவர்களும் உள்ளார்கள். ஒருவன் நீச்சல் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு பயிற்சியாளருடன் ஆற்றுக்குச் சென்றானாம். ஆற்றின் வெள்ளத்தையும், வேகத்தையும் பார்த்துவிட்டு ஆற்றில் இறங்காமலே ஓடினானாம். என்னப்பா ஓடுகிறாய், நீச்சல் கற்றுக் கொள்ளவில்லையா என்று பயிற்சியாளர் கேட்டதற்கு எனக்கு எப்போது எந்த அபாயமும் இல்லை என்று நிச்சயமாக தெரிகிறதோ அப்போது வந்து கற்றுக்கொள்கிறேன் என்றானாம். அந்த நம்பிக்கை உனக்கு எப்போது எப்படி வரும் என்று கேட்டதற்கு, முதலில் நான் வீட்டில் என் கட்டிலில் போய் பார்த்து படுத்து கற்றுக் கொள்கிறேன். அதில் நல்ல நம்பிக்கை வந்த பிறகு ஆற்றுக்கு வருகிறேன் என்றானாம்.

ஆனால் பொதுவாக ஒத்தி போடுவது ஒரு எதிர்மறைக் குணம். ஒத்தி போடத்தான் வேண்டுமெனில் கோபத்தை, வெறுப்பை, பேராசையை ஒத்திப் போடுங்கள். சிந்தித்ததை செயல்படுத்தும் உங்கள் நல்ல முடிவை உடனே செயல்படுத்தத் தொடங்குங்கள். சிந்தனையை செயல்படுத்த வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் அதில் நம்பிக்கையுடன் முயல வேண்டும். பொதுவாகவே ஆண்களை விட பெண்களுக்கு நம்பிக்கை அதிகம். அதனால்தான் அத்தகைய பெண்கள் உலக அளவில் சாதித்து வருகின்றார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை மங்கையை சொல்லலாம். சர்வதேச நிதியத்தின் (IMF) பொருளாதார நிபுணராக சிறப்பாக பணியாற்றியவர் இந்தியாவைச் சார்ந்த கீதா கோபிநாத்.இவர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கீதா கோபிநாத், டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பொருளாதாரம் படித்து, பின்பு அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.பின்பு சில காலம் ஹார்வர்டில் பேராசிரியராக இருந்த கீதாவிற்கு ஐ.எம்.எப்-இல் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார் கீதா.கோவிட் காலத்தில் ஐ.எம்.எப்-இன் பொருளாதார ஆராய்ச்சிக் குழுக்களை மிகவும் சிறப்பாக கையாண்டிருக்கிறார் கீதா கோபிநாத். இந்த அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணராக பதவியேற்ற முதல் பெண் கீதாதான் என்பது கூடுதல் சிறப்பம்சம். இதைத் தொடர்ந்து இப்போது அதைவிட மிகப் பெரிய பதவியான முதன்மை நிர்வாக டெபுடி டைரக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவருக்கு முன்பு இந்தப் பதவியை வகித்துவந்த ஜ்யோபிரி ஓகோமோட்டோ தனியார் துறைக்குச் செல்வதால், இந்த மாற்றம் நிகழ்ந்து உள்ளது. இதைப் பற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஐ.எம்.எப்-இன் மேலாண்மை இயக்குநர் க்ரிஸ்த்தினா ஜியோர்ஜிவா, ஓகோமோட்டோ பணியில் இருந்து செல்வதில் எனக்கு வருத்தம் என்றாலும், கீதா வருவதில் மிகுந்த மகிழ்ச்சி என்றார். ஏனென்றால் கீதா மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று அவர் பாராட்டுகின்றார்.அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் சேர உள்ளதாக தெரிவித்துள்ளார் கீதா கோபிநாத். சர்வதேச நாணய நிதியத்தில் சுமார் 7 அற்புதமான ஆண்டுகளுக்கு பிறகு நான் எனது கல்வி வேர்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளேன் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் இவ்வுலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அசாத்தியமான கல்வியறிவும் அறிவார்ந்த தலைமைப் பண்பும் கொண்டவர். மேலும் பெரிய அளவில் சர்வதேச அனுபவமும் கொண்டவர் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்ட்டின் லகார்டே பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக பொருளாதார மன்றத்தால் இளம் உலகளாவிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மேலும் அவர் பெற்ற விருதுகளும் ஏராளம்.கொல்கத்தாவில் பிறந்து, மைசூரில் வளர்ந்து, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்ட்டனில் படித்த கீதா கோபிநாத், சர்வதேச மன்றங்களில் இந்தியாவின் வளர்ந்துவரும் அறிவுசார் பெண்மணியாக அடையாளம் காணப்பட்டு அடிக்கடி பாராட்டப்பட்டு உள்ளார்.ஜனவரி 20ஆம் தேதி என்.டி.டி.வி. ஊடகத்துக்கு கீதா கோபிநாத் அளித்த நேர்காணலில், இந்தியா போன்றதொரு நாட்டுக்கு இப்போது அதிக முதலீடுகள் தேவை. அதிக முதலீட்டை ஈர்த்தால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தமுடியும். நுகர்வுச்செலவுகள் குறைவாக இருப்பதால் முதலீட்டுச் சூழலை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்துவதற்கு முதலீடுகள் தேவை என்கிறார் கீதா கோபிநாத். கீதா கோபிநாத் சர்வதேச அளவில் ஒரு மிகப்பெரிய பதவியில் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாக பணியாற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.இவரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் சிந்தித்ததை செயல்படுத்தி துணிச்சலுடன் முடிவுகளை விரைந்து எடுத்ததுதான், இவரைப் போலவே நீங்களும் எந்த துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, உங்கள் துறையில் ஒரு இலக்கை சிந்தித்து அதை செயல்படுத்துங்கள்.அத்துடன் விரைந்து முடிவெடுங்கள்.உங்களுக்கும் வெற்றி வசமாகும்.

Advertisement

Related News