தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் மனதார நேசித்தவர் வி.பி.சிங்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழ்
சென்னை: மண்டல கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தி கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் இட ஒதுக்கீட்டின் மூலம் ஒளியேற்றிய சமூகநீதி காவலர் என முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் நினைவு நாள் இன்று. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்துக்குரிய நண்பர். தமிழ்நாட்டையும் மற்றும் தமிழ் மக்களையும் மனதார நேசித்தவர். சென்னையில் ஆளுயர சிலை வைத்து வி.பி.சிங் அவர்களுக்கு நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமைச் சேர்த்தார்கள். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழ் ஓங்குக! உயர்கல்வியிலும் - வேலைவாய்ப்புகளிலும் தலைமைப் பொறுப்புகளிலும் நமது திறமையால் சாதனை படைத்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! சாதிக்கப் பிறந்தவர்களுக்குச் சாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்!" என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரச குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், அடித்தட்டு மக்களுக்காக சிந்தித்தவர். சமூகநீதியை விட பிரதமர் பதவியே பெரிதல்ல என்று துணிந்து, மண்டல் அறிக்கைக்கு உயிர் கொடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நண்பர். வி.பி.சிங் அவர்களின் புகழ் என்றும் நம் நெஞ்சங்களில் வாழும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.