சிம்பிள் ஒன் ஸ்கூட்டர்
Advertisement
இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 212 கி.மீ தூரம் வரை செல்லும். மேம்படுத்தப்பட்ட தற்போதைய மாடலில் இது 248 கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தலைமுறை 1.5 தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலம் இது சாத்தியமாகியுள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் உள்ள 8.5 கிலோவாட் மோட்டார் அதிகபட்சமாக 11.4 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 2.77 நொடிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். நேவிகேஷன், பார்க் அசிஸ்ட், டயரில் காற்று அழுத்தத்தை தெரிவிக்கும் தொழில்நுட்பம், உட்பட பல அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.1.66 லட்சம்.
Advertisement