தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சில்லி பாயின் ட்...

* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடக்கும் முதல் கட்ட அரையிறுதி முதல் ஆட்டத்தில் ஒடிஷா எப்சி - மோகன் பகான் எஸ்ஜி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 11 முறை மோதியுள்ளதில் மோகன் பகான் 5-1 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது. எஞ்சிய 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. நடப்பு தொடரில் மோதிய 2 ஆட்டங்களும் டிராவில் முடிந்தன (2-2 மற்றும் 0-0).
Advertisement

* ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பன்ட் இடம் பெற வேண்டும் என சவுரவ் கங்குலி, ரிக்கி பான்டிங் தெரிவித்துள்ளனர்.

* காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் (ஆஸி.), ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ ஆலோசனைக்காக ஏப்.12ம் தேதி பெர்த் சென்ற மார்ஷ் , தொடர்ந்து அங்கேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறி நடுவருடன் வாக்குவாதம் செய்த ஆர்சிபி வீரர் விராத் கோஹ்லிக்கு, போட்டிக்கான ஊதியத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

* மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) விலகியுள்ளார்.

* ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் பெர்லினில் நடைபெற உள்ள லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் அரோப்பிய அணிக்காக களமிறங்க உள்ளதை உறுதி செய்துள்ளார்.

* 100வது வாரமாக இகா நம்பர் 1

டபுள்யு.டி.ஏ மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (22 வயது) தொடர்ந்து 100வது வாரமாக நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துள்ளார். அவர் 10,560 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். முன்னதாக ஸ்டெபி கிராப்(377 வாரம்), மார்டினா நவ்ரத்திலோவா (332), செரீனா வில்லியம்ஸ் (319), கிறிஸ் எவர்ட் (260), மார்டினா ஹிங்கிஸ் (209), மோனிகா செலஸ் (178), ஆஷ்லி பார்டி (121), ஜஸ்டின் ஹெனின் (117 வாரம்) ஆகியோர் நம்பர் 1 இடத்தில் அதிக வாரங்கள் நீடித்து சாதனை புரிந்துள்ளனர். நடப்பு தரவரிசையில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 7848 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், அமெரிக்க நட்சத்திரம் கோகோ காஃப் (7258), போர்ஷே கிராண்ட் பிரீ டென்னிஸ் தொடர் உள்பட நடப்பு சீசனில் 3 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள கஜகஸ்தானின் எலனா ரைபாகினா (6293), ஜெஸ்ஸிகா பெகுலா (4870, அமெரிக்கா) அடுத்த இடங்களிலும் உள்ளனர்.

Advertisement

Related News