தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

9வது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூர் தியாகத்தின் 350வது ஆண்டு விழாவையொட்டி பஞ்சாப் முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

சென்னை: 9வது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூர் தியாகத்தின் 350வது ஆண்டு விழாவையொட்டி பஞ்சாப் முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பஞ்சாப் மாநில அரசின் சார்பில் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நடைபெற்ற ஒன்பதாவது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூரின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதம்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.10.2025 அன்று தலைமைச் செயலகத்தில், பஞ்சாப் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எஸ். ஹர்பஜன் சிங் மற்றும் பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பிரேந்தர் குமார் கோயல் ஆகியோர் சந்தித்து, பஞ்சாப் மாநில அரசின் சார்பில் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஒன்பதாவது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர். தமிழ்நாடு அரசின் சார்பாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோரை அவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில், நேற்று (23.11.2025) ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நடைபெற்ற ஒன்பதாவது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்துகொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதம் மற்றும் நினைவுப் பரிசினை பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானிடம் வழங்கினார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில், குரு தேக் பகதூர் ஜியின் 350வது தியாகிகள் தின நினைவேந்தல் விழாவில் கலந்துகொள்ளுமாறு தனக்கு அளித்த அழைப்பிற்கு மீண்டும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்இந்த முக்கியமான நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியையும் தனது சார்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவர்களை அன்புடன் வரவேற்க முன்வந்த தங்கள் நல்லெண்ணத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உங்களிடம் வழங்குவதற்கு அவர்களிடம் அளித்துள்ள நினைவுப் பரிசினை அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். விழா மிகச் சிறப்பாக நடைபெற தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, குரு தேக் பகதூர் நிலைநாட்டிய துணிச்சல், கருணை மற்றும் மதச் சுதந்திரம் ஆகிய உன்னத லட்சியங்களுக்கு தனது மரியாதையையும் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News